இரணைமடு வாய்காலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் இரு இளைஞர்கள் பலி!
கிளிநொச்சியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் முதன்மை வீதியில் பன்னங்கண்டி பகுதியில் இரணைமடு குளத்தின் பிரதான வாய்காலுக்குள் மோட்டர் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்ததில் இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை 13.01.2024 இடம்பெற்றுள்ளது. அதிகப்படியான வேகமே இந்த உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.
உயிரிழந்த இளைஞர்கள் இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுசன் மற்றும் இராமநாதபுரம் அழகாபுரி பகுதியினை சேர்ந்த 18 வயதுடைய கிருஸ்ணன் சதீசன் இன்ற இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்களின் உடலம் கிளிநொச்சி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.