வெடிக்காத செல் குண்டு மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் இன்று (18ஆம் திகதி) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் ஒரு வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, குறித்த பகுதியில் வீட்டு வேலைக்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த வேலையாட்கள், இன்று மதியம் 12.30 மணியளவில் அத்திவாரப் பகுதியில் வெடிக்காத நிலையில் உள்ள வெடிகுண்டொன்றை கண்டறிந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக வேலைநிறுத்தம் செய்து, சம்பவத்தை மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர், மருதங்கேணி பொலிஸார் பிற்பகல் 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.