இராணுவ கண்காணிப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் இன்று (21) மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது.
இந்நிலையிலேயே, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கோப்பாய் மற்றும் யாழ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடாத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினை சுற்றி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாவீரர் வார நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்க கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின், சில பொலிஸ் நிலையங்கள் விடுத்த கோரிக்கைகளிற்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.