பேராதனைப் பட்டதாரி யுவதி யாழில் தற்கொலை
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற தவராசா தர்ஷினி (வயது 25) என்ற பெண் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த யுவதி யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.
தனது மரணத்துக்கு தானே காரணம் எனவும் பெற்றோரை கவனமாக பார்க்குமாறும், தொலைபேசி பாவனை தொடர்பில் அறிவுரை கூறி தனது தங்கைக்கு கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டே தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியதாகவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது இடம்பெற்ற பகிடிவதையினால் மன உலைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஒன்றரை வருடத்திற்கு முன் இவருக்கு பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகவும், தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.