யூ.என்.பி. ஆண்டு விழா ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த இவ்விழாவை ஒத்திவைக்கும் தீர்மானம், இன்று (02) கொழும்பில் கூடிய யூ.என்.பி. நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இம்மாதத்திலேயே ஆண்டு விழா வேறு நாளில் நடத்தப்படும் எனவும், ரணிலுக்கான மருத்துவ ஆலோசனைகளும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையும் அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தலதா அதுகோரல குறிப்பிட்டார்.