வந்தேறு குடிகள் சிங்களவர்களே என்று சிங்க கோட்டைக்குள் கர்சித்த சிங்கம் ஓய்ந்தது

இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் என்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள். இவ்வாறு சிங்கத்தின் கோட்டைக்குள் கர்சித்த சிங்கம், கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்று புதன்கிழமை இரவு காலமானார்.

சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், இலங்கை தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும்  கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு: எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டு, வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.

மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன்.

இவ்வாறு நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன பகிரங்கமாகவே தெரிவித்து வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.