அறிகுறிகள் தென்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடன் பரிசோதனை செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுதியுள்ளது.

கடந்த வாரத்தில் நீண்ட விடுமுறை இருந்தமையினால் பலர் சுற்றுலாவிற்காக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் நோய் அறிகுறி தென்படும் அனைவரும் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களுக்கு கடந்த நாட்களில் பலரும் சென்றிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெருங்கி எவருக்கெனும் தொற்று ஏற்பட்டால் அவரோடு தொடர்புபட்டவர்களும் பரிசோதனை செய்து கொள்வதே பொருத்தமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.