யாழில் பொலிஸ் காவலரன் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்த காரணம் என்ன?
யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் மீது நேற்று புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்ற இருவர் தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் இவர்களை துரத்தி சென்ற பொலிஸார் கைது செய்தனர்.
போதைப்பொருளுடன் நபர் ஒருவரை குறித்த பொலிஸ் காவலரன் அருகில் வைத்து பொலிஸார் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே குறித்த காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு, ஊர்காவற்துறையை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தையும், தீவகத்தையும் இணைக்கும் மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.