மஹிந்தவின் பணம் திருடப்பட்டதா? ஊடக பிரிவு விளக்கம்!

மஹிந்த ராஜபக்ஷவின் வங்கி கணக்கில் இருந்து பெருமளவான பணம் திருடப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் குறித்து இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிந்து இருக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என நான் நினைக்கின்றேன்.

இதேவேளை, தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் இரகசியமாக வங்கி அட்டையை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை களவாடியதாக செய்திகள்  வெளியாகி இருந்தது.

இச் சம்பவத்தை அடுத்து குறித்த பிரத்தியேக செயலாளர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.