ஒருபுறம் வெள்ளையடிப்பு, மறுபுறம் விசாரணை – நடப்பது என்ன?
புலம்பெயர் தேசத்தின் தமிழ் தரப்புக்கள் பேரில் ஆட்சியாளர்களிற்கு வெள்ளையடிப்பது ஒருபுறம் தொடர மறுபுறம் கைதுகள் மற்றும் விசாரணைகள் மும்முரமடைந்துள்ளது.
ஏற்கனவே மாவீரர் தின நினைவேந்தல்களில் முன்னின்று செயற்பட்ட முன்னாள் போராளிகள் கிளைமோர்களை தயாரித்ததாக கைதாகிவருகின்றனர்.இதுவரை 17இற்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் இலங்கை அரசின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரும் உதயன் நாளிதழின் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று 3 மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணைகளை மேற்கொண்டனர்.