இலங்கை வந்த இளம் அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்தது யார்? பின்னர் நடந்தது என்ன?
இலங்கைக்கு சுற்றுலா வந்த 25 வயது அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு 18 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய ஒருவரும் மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்ட கண்டி பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த 30ஆம் திகதி கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அழுதுகொண்டிருப்பதைக் கண்ட பயணிகள் குழுவொன்று அவரிடம் இதுபற்றிக் கேட்டு நானுஓயா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்படி, நானுஓயா பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கடந்த 29ஆம் திகதி கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் தாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இந்த யுவதி தெரிவித்துள்ளார்.
2,400 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள தங்க வளையல், 3,600 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி வைரம் பதித்த காதணிகள் ஆகியவற்றை சந்தேக நபர்கள் திருடிச் சென்றதாக பொலிஸில் மேலும் முறைப்பாடு அளித்தார்.
கண்டியில் உள்ள தங்குமிடமொன்றில் சந்தேகநபர்கள் இருவருடன் மதுபானம் அருந்தியதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு ஞாபகம் இல்லை எனவும் யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சுயநினைவு திரும்பியபோது படுக்கையில் நிர்வாணமாக இருந்ததாக பொலிசாரிடம் கூறினார்.
சந்தேகநபர்கள் இருவரும் சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கை பெற நடவடிக்கை எடுத்துள்ளதுடன், வெளிநாட்டு யுவதியை சட்ட வைத்தியரிடம் பரிந்துரைக்க முயற்சித்த போதும் அவர் மறுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.