இலங்கை சுற்றாடல் அமைச்சர் சிறைக்குள் அடைக்கப்பட்டது ஏன்?
தற்போதைய சுற்றாடல் அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் வழக்கு தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலியவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்கு மூலம் பதிவு செய்திருந்தனர். இதன் பின் அதிரடியாக கெஹலிய கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.