புத்தளத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்ததாக ஒரு பெண் நேற்று (28) இரவு முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் புத்தளம், முந்தல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் என்பதும், அவரிடம் இருந்து 75 லீற்றர் மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.