தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு!

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, வீட்டில் தானாகவே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தீவிர காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று திங்கட்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக திடீர் மரண விசாரணையை விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். விசாரணைக்காக சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.