முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பலி
மின்சாரம் தாக்கியதில் முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் விசுவமடுப் பகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய இளைஞர், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடுவில் உள்ள இரும்பு ஒட்டும் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
தொழில் கருவிக்கு மின் இணைப்பை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.