அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை அவதானம்!
வானிலை முன்னறிவிப்பு வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள தாழ் அமுக்கப் பிரதேசத்தின் தாக்கத்தால், இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய நிலைமைகள் உள்ளன.
சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியபடி:
வட மாகாணம் மற்றும் தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.
காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படுவதோடு, இடியுடன் கூடிய மழை மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் பெய்யக்கூடும்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடல் பிராந்தியங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மணி.35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும், குறிப்பாக கடல் பிராந்தியங்களில் மிகவும் கொந்தளிப்பான நிலைகள் காணப்படக்கூடும்.
இதனைக் கண்டி பொது மக்கள் அவதானமாக செயல்பட வேண்டிய நிலை உள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.