அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்திற்கு சென்றது ஏன்: சட்டமா அதிபர் திணைக்களம் தௌிவூட்டல்

(LBC Tamil) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கின் முன்விளக்க மாநாட்டிற்கான ஏற்பாடுகளுக்காகவே தமது அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்திற்கு சென்றதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர உள்ளிட்ட ஐவரடங்கிய குழு, தாக்குதல்கள் நடத்தப்பட்ட இடங்களுக்கான கள விஜயத்தில் ஈடுபட்டதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் வெடிச்சம்பவம் பதிவாகிய பகுதிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் கள விஜயமொன்றை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் பகுதிகளுக்கும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கும் குறித்த குழுவினர் சென்றிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை, சூழ்ச்சியில் ஈடுபட்டமை உள்ளிட்ட 12, 270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌஃபர் மற்றும் சாஜித் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கின் முன்விளக்க மாநாடு எதிர்வரும் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் முன்விளக்க மாநாடு நடத்தப்படவுள்ளது.

தமித் தொடவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.