அநுர அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – டக்ளஸ்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை, அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தி செயற்படுமெனில், அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க தயார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் 4 முதல் 5 ஆசனங்கள் கிடைத்தால், தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கும் எளிதில் தீர்வு காணமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.