அநுர பெற்ற 419 மில்லியன் எங்கே? கேள்வி எழுப்பும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
அனுர அரசாங்கம் கடந்த 02 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 419 பில்லியன் ரூபா பெறுமதியான பத்திரங்கள் மற்றும் பிணைமுறி கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மிகப்பெரிய அளவில் கடன் பெறப்பட்டபோதும், பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் அரசாங்கம் இதுவரை எடுத்த கடன்களை எவ்வாறு பயன்படுத்தி முதலீடுகள் செய்துள்ளது என்பதை தெளிவாக விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்ப பிரசாரம் செய்யும் நிலையில், சிங்கள இனவாதத்தை ஆதரித்து செயல்படுவதாகவும் ரோஹினி கவிரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், வடக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு தேவையில்லை எனவும், தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை காப்பாற்ற மட்டுமே இந்த விவகாரங்களை பேசுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.