இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் தொற்று!
இலங்கையில், சரியான பாலியல் கல்வி இல்லாமை மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் தவறான பயன்பாட்டால், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியிருக்க, இவர்களில் 15% இளைஞர்களாக இருக்கிறார்கள்.
மருந்து அடிமையாதல் உள்ளிட்ட காரணங்கள் தொற்று நோய்களின் விரைவான பரவலுக்கு வழிவகுக்கின்றன என்று சமூக சுகாதார நிபுணர் டாக்டர் விந்தியா குமாரிபேலி தெரிவித்தார்.