இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சிரேஷ்ட பிரமுகர் கட்சியிலிருந்து விலகல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) மூத்த உறுப்பினராக இருந்த ஏ. பிலிப்குமார் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 37 வருடங்களாக கட்சியில் உறுதியான பணியைச் செய்த அவர், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும், இளைஞர் அணி இணைப்பாளராகவும் மற்றும் கட்சியின் உபசெயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயற்பட்டுள்ளார்.
பிலிப்குமார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் CWC சார்பில் போட்டியிட்டு 30,000 வாக்குகள் பெற்று ஆதரவைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.