இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிப்பு!
இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை வியாழக்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டது.இந்த விமான சேவையானது சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனத்தால் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் சிங்கப்பூரிலிருந்து இலங்கை வருவதற்கு ஏர்பஸ் A320 என்ற 5 விமானங்கள் இயக்கப்படும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia விமான நிறுவனத்திற்கு சொந்தமான 3K333 என்ற விமானம் வியாழக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தது.