இலங்கையர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து!
சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியாகும் உணவுகள், மருந்துகளை வைத்தியரது பரிந்துரை இல்லாமல் பாவிப்பதனை தவிர்க்குமாறு சுகாதாரஅமைச்சு பொதுமக்களிடம் கேட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்க கூடிய உணவுகள் என வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்பவேண்டாம் என வலியுறுத்தபட்டுள்ளது.
மக்கள் எப்போதும் வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய செயற்படவேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேடவைத்தியர் ஹேமந்தஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றில் எடுக்கவேண்டிய உணவு, மருந்து பலவற்றை சமூகவலைத்தளங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இவ்வாறான உணவுகள், மருந்துகள் குறித்து அவதானமாக இருக்கவேண்டும். அதில் எது உண்மையானது பொய்யானது என தெரியவில்லை. ஆகவே அவற்றினை பெற முன் கட்டாயமாக வைத்தியரது ஆலோசனைகளை பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.