ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்

ஈழத்தின் பிரபல எழுத்தாளரும் கவிஞருமான **மு. பொன்னம்பலம்** (மு. பொ) புதன்கிழமை (நவம்பர் 6) கொழும்பில் காலமானார். அவருடைய மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கு மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.

**1939** ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் **புங்குடுதீவில்** பிறந்த மு. பொ, கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் போன்ற பல இலக்கிய வடிவங்களில் ஈடுபட்டு, ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு தன் ஆய்வுரைகளாலும் எழுத்துக்களாலும் பெருமை சேர்த்தவர்.

**1968** இல் வெளியான **“அது”** எனும் கவிதைத் தொகுப்பு இவரது முதல் நூலாகும். அதன்பின் **அகவெளிச் சமிக்ஞைகள்**, **விடுதலையும் புதிய எல்லைகளும்**, **பேரியல்பின் சிற்றொலிகள்**, **யதார்த்தமும் ஆத்மார்த்தமும்**, **கடலும் கரையும்**, **நோயில் இருத்தல்**, **திறனாய்வு சார்ந்த பார்வைகள்**, **பொறியில் அகப்பட்ட தேசம்**, **சூத்திரர் வருகை**, **விசாரம்**, **முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை** போன்ற பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

**மு. தளையசிங்கம்** என்ற எழுத்தாளரின் சகோதரராகவும் இருந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் இலக்கியத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.