உதயன் பத்திரிகை ஓனருக்கு அடிக்கப்பட்டது நாமம்
கடந்த 4ம் திகதி பொய்யான செய்தியை வெளியிட்ட உதயன் பத்திரிகை உரிமையாளருக்கு நாமம் அடிக்கும் படிமுறை ஆரம்பமாகியுள்ளது.
மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு, ஆறு திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்து மூடல்! வடக்கு ஆளுநர் பணிப்புரை எனும் தலைப்பில் செய்தி தாளின் முதல் பக்கத்தில் பொய்யான செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் ஆற்றிவரும் சைவ தமிழ் பணிகள் எண்ணற்றவை. உதயன் பத்திரிகை நிறுவனம் இயங்கும் ஆதனம் குறித்த ஆதன உரிமையாளரினால் கலாநிதி ஆறு திருமுருகனால் நடாத்தப்படும் சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆதனத்தில் இருந்து வெளியேற உதயன் முதலாளி மறுத்துவரும் நிலையில் இவர்களை வெளியேற்ற ஆறுதிருமுருகன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் கடுப்படைந்த உதயன் முதலாளி பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை கலாநிதி ஆறு திருமுருகன் முன்னெடுத்துள்ள நிலையில் சட்டத்தரணி குருபரனால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதம் கிடைத்து இரண்டு நாட்களுக்குள் பத்திரிகையில் வெளியிடப்பட்ட வடிவத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அத்துடன் 300 மில்லியன் நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென கலாநிதி ஆறு திருமுருகன் சார்பில் கேட்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் உள்ளது.
அந்த கடிதம் முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ளது.