உயிரிழந்த மருத்துவரின் பிள்ளைகளிற்கு 21 பொலிஸ் பாதுகாப்பு!
கொரோனா தொற்றால் சில தினன்களுக்கு முன்னர் உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட்டின் மகள் மற்றும் மகனின் பாதுகாப்பிற்கு என 21 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பாதுக்க இதனை தெரிவித்தார்.
அதன் பிரகாரம் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உட்பட 21 அதிகாரிகள் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
என்ன காரணத்திற்காக இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் தற்போதுவரை தகவல் வெளிவரவில்லை.
இதேவேளை உயிரிழந்த மருத்துவர் ஏலியந்த வைட் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட மருத்துவராக கடமையாற்றி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.