கடவுச்சீட்டு விநியோகம் அடுத்த மாதம் முதல் வழமைக்கு திரும்பும்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘பி’ தொகுதி ஒப்பந்தத்தின் கீழ் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதன் மூலம் அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த மாதம் நடுப்பகுதியில் மேலும் 100,000 வெற்றுக் கடவுச்சீட்டுகள் மற்றும் டிசெம்பர் மாதத்தில் 150,000 வெற்றுக் கடவுச்சீட்டுகள் கிடைக்கப் பெறவுள்ளன. எனவே, இனி மாதம் 750,000 வெற்றுக் கடவுச்சீட்டுகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், தினசரி சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் சேவையை சிறப்பாகப் பெறுவதற்காக நேரம் மற்றும் திகதி ஒதுக்கி, நிகழ்நிலை முறைமை மூலம் சேவைகள் வழங்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.