கடும் நிதி நெருக்கடியில் திறைசேரி: ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவிப்பு
(LBC Tamil) திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதனால் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறினார்.
2023 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிதி நெருக்கடியை திறைசேரி எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.