கம்மன்பிலவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த கத்தோலிக்க திருச்சபை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபை, உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் இரு அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.
இது தொடர்பில் அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ, “நாங்கள் இன்று எங்களின் நிலைப்பாட்டினையும், கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த எங்களின் பதில்களையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.