இந்தியா கலாம் 4 ஏவுகணை சோதனையில் வெற்றி!
விசாகப்பட்டணம் அருகே, அணு ஆயுதத்தை துல்லியமாக தாங்கிச் செல்லும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணையை ஐஎன்எஸ் அரிகாட் நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை 3500 கி.மீ. தொலைவில் இலக்கை துல்லியமாக தாக்கியது.
இந்த சோதனையுடன், நீர்மூழ்கியிலிருந்து அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளும் திறனுடன் இந்தியா உலகின் 6-வது நாடாக இணைந்துள்ளது. இதுவரை இந்த திறனை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கொண்டிருந்தன.
ஐஎன்எஸ் அரிகாட் இந்தியாவின் 2-வது அணுசக்தி நீர்மூழ்கி ஆகும். இதனுடன், 2025-ல் ஐஎன்எஸ் அரிதமன் மற்றும் 5000 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணைகளுடன் 4-வது அணுசக்தி நீர்மூழ்கி தயாரிக்கப்படுகிறது.
இந்த முன்னேற்றம், சீனா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு சவாலாக அமைகிறது.