கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி
களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை – பதுரலிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். பதுரலியவிலிருந்து அகலவத்தை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் காயமடைந்து, பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெறும் போது, பின்புறத்தில் இருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நபர் களுத்துறை, பெலெந்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இந்நிலையில், விபத்தில் ஈடுபட்ட காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இந்த விபத்துக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.