கினியில் கால்பந்தாட்ட போட்டி மோதல்களில் 100க்கும் மேற்பட்டர் உயிரிழப்பு!
மேற்கு ஆபிரிக்காவின் கினி நாட்டின் ஜெரெக்கோ ரணியில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனை வட்டாரங்கள் கூறும் படி, பெரும் அழிவை ஏற்படுத்திய இந்த மோதல்களில் உடல்கள் பல இடங்களில் காணப்பட்டுள்ளன.
போட்டியின் பின்னணியில், போட்டி தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பு காரணமாக ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, நகரத்தின் பொலிஸ் நிலையம் தீமூட்டப்பட்டு எரியப்பட்டுள்ளது.