கிளிநொச்சியில் அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் மோதி விபத்து.!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது
கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி சென்ற தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்ற போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும் இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.