குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர்
(LBC Tamil) குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது.
ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட இந்த தடுப்பு அணைக்கு, மோடியின் தாயாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, அறக்கட்டளையின் தலைவர் திலீப் சாகியா தெரிவித்தார்.