குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமான குண்டுதாக்குதலின் 31ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் 1993ஆம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று 13ஆம் தேதி நினைவு கூறப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார் தலைமையில் ஆலயத்தில் காலைத் திருப்பலியின் நிறைவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இதில், நினைவுத் திருப்பலியினை மண்ணின் மைந்தன் அருட்பணி கை. கனிசியஸ் ராஜ் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.
இந்த நிகழ்வில், குண்டு தாக்குதலின் போது உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.