கையாலாகாத வடமாகாணசபை:வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்!

 

வடமாகாணசபையின் பெரும் பகுதி அரச சேவையாளர்களை யாழப்பாணத்தில் முடக்கிவைத்துள்ள வடமாகாணசபை அதிகாரிகளால் வன்னி பெரும் பாதிப்புக்களை அடுத்துவரும் ஆண்டில் எதிர்கொள்ளவேண்டிவருமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள் தொடர்பில்  சீர்துக்கி பார்க்க மறுக்கும் வடக்குமாகாணசபையின் நிர்வாக உயர்மட்டங்களால் இத்தகைய நிலை தோன்றியுள்ளது.

வடக்குமாகாணசபையின் யாழ்ப்பாணத்திற்;கு வெளியே உள்ள அலுவலகங்களில்

வேலைபுரிகின்ற பலர் இடமாற்றங்களுக்கு விண்ணப்பித்திருந்தும் இடமாற்றம்

வழங்கப்படவில்லை என தெரியவருகின்றது.

கடந்த பல வருடமாக இடமாற்றங்கள் வழங்கப்படாமைக்கான காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மீள்நிரப்பலாக ஆட்கள் வந்து சேராமையே என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

யுத்தகாலங்களில் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தவர்கள் தாங்களும் யாழ்ப்பாணத்திறகு; வெளியே வேலைசெய்ததாக கூறுவதுடன் பலர் வெளியே வர மறுக்கின்றனர். அது மட்டுமல்லாது கடந்த வருடம் வன்னிக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்கள் பலவும் இரத்துச்செய்யப்பட்டதனால் இவ்வருடம் இடமாற்றம் பெற்றவர்களும் தம்மை விடுவிப்பதும் சாத்தியமற்றதாகுமென ஐயப்படுகின்றனர்.

ஏற்கனவே அலுவலகங்களில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அபிவிருத்தி

வேலைகளில் பின்னடைவு இருப்பதாகவும் அனுபவம் குறைந்த பலர்

வேலைசெய்யும் இடங்களுக்கு விசேட தரங்களை சார்ந்த அனுபவமிக்கவர்கள்;

நியமிக்கப்படுவதில்லை என்பதுடன் நியமிக்கப்பட்டவர்களுக்கும் உடனடி

இடமாற்றங்களும் வழங்குவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அத்துடன் முதுமுறை மூப்பில் மேலுள்;ளவர்கள் ஒப்பீட்டளவில் வேலைப்பழு குறைந்த யாழ்ப்பாணத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன் தமது ஆலோசனைகள் கேட்கப்படுவதில்லை என அதிகாரிகளும் குற்றம் சுமத்திவருகின்றனர்.

இவை தொடர்பாக உயர் நிர்வாகங்கள் கருத்திலெடுக்காது தாங்கள் நினைத்தவாறு இடமாற்றங்களை வழங்கிவருவதனாலும் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களை

விடுவிக்காததனாலும் பாதிக்கப்படுவோர் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக விசனம்

தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கடந்த எட்டுவருடங்களிற்கு மேலாக இடமாற்றம் ஏதுமின்றி கிளிநொச்சியில் சேவையாற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேற அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.