கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை பார்வையிட்ட ஐ.நா வதிவிட பிரதிநிதி
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை இன்று பார்வையிட்டார்.
வடக்குக்கு விசேட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐநா வதிவிட பிரதிநிதி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கும் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் இந்த புதைகுழி வழக்கை முன்னெடுத்து வரும் சட்டத்தரணிகளில் ஒருவரான கணேஸ்வரன் ஆகியோர் புதைகுழி அமைந்துள்ள பகுதியினை பற்றி ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தினர்.