கொலையா? விபத்தா? – கண்டியில் மர்ம மரணம்!
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிட்டிய மீகனுவ வீதியில், முச்சக்கரவண்டிக்கு அருகில் வீழ்ந்து கிடந்த நபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் போது, 47 வயதான அந்த நபர், முச்சக்கரவண்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறார். அவர், கண்டி நோக்கிய வீதியின் வலதுபுறத்தில் உள்ள மின்கம்பம் அருகில் முச்சக்கரவண்டியுடன் இறங்கிய போது விழுந்து கிடந்தார். அதை தொடர்ந்து, அவரை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் வெரெல்லகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், சடலத்தின் பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் நடைபெறுவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.