சஜித் பிரேமதாச-ஜப்பான் தூதுவர் சந்திப்பு!
ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், ஜப்பான்-இலங்கை நீண்டகால இராஜதந்திர உறவை மேம்படுத்த தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார். மேலும், ஜப்பான் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க எதிர்க்கட்சியின் முழு ஆதரவை வழங்குவதையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் மருத்துவர் காவிந்த ஜயவர்தனவும் கலந்து கொண்டார்.