சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புகளை பேணிய ஒருவர் இந்தியாவில் கைது

(LBC Tamil) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வு விசாரணை முகாமையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஷெயிக் ஹிதயதுல்லா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கடந்த ஒக்டோபர் மாதம் தமிழகத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடன் தொடர்புகளை பேணிய ஒருவர் என செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.