சிந்துஜா வழக்கில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

மன்னார், கட்டையம்பனைச் சேர்ந்த இளம்தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை மன்னார் நீதவான் நீதிமன்றம் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

சிந்துஜா இரத்தப்போக்கின் காரணமாக மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணத்துக்குப் மருத்துவமனையின் அசமந்தப் போக்கே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உறவினர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆனால், இந்த விசாரணைகள் மந்தகதியில் இருக்கின்றன என்று பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கு பதிலளித்த பொலிஸார், இந்த வழக்கை மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவுக்குப் உட்பட்டதாக தெரிவித்தனர்.

மரணத்தின் நியாயத்தை நிலைநிறுத்தும் வகையில், இந்த வழக்கின் விசாரணைகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.