மீள இயங்கும் செயலிழக்க செய்யப்பட்டநுரைச்சோலை மின்பிறப்பாக்கி
(LBC Tamil) நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட மின்பிறப்பாக்கியை இன்று(08) முதல் மீண்டும் இயக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்ட முதலாவது மின்பிறப்பாக்கி, தற்போது மீண்டும் இயக்கப்படுவதாக சபையின் மேலதிக பொது முகாமையாளர் தம்மிக்க நவரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் 02 நாட்களுக்குள் குறித்த மின்பிறப்பாக்கி தேசிய அமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியொன்று பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 22ஆம் திகதி நள்ளிரவு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதன் காரணமாக தேசிய கட்டமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டது.