டிசம்பர் 4 ல் நாக சைதன்யா – சோபிதா திருமணம்!

நடிகர்கள் நாக சைதன்யா – சோபிதா திருமணம் வரும் டிசம்பர் 4-ம் திகதி நடைபெற இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8-ம் திகதி நடைபெற்றது. இதனை புகைப்படங்களுடன் நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இருவருக்குமான திருமண திகதி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. தற்போது நாக சைதன்யா – சோபிதா திருமணம் டிசம்பர் 4-ம் திகதி நடைபெறவுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் வைத்து மிக பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் திருமணத்தைத் தொடர்ந்து நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.