தமிழரசு கட்சியினருடன் யாழில் அனுர குமார சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் சிறப்புச் சந்திப்பொன்று இன்று (11) காலை யாழில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் மாவை சேனாதிராசா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணம் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது பிரதானமாக அரச தலைவர் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம், ஊடகப் பேச்சாளர் அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்கா, இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழு நேற்றையதினம் தமிழரசுக் கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியினரும் தமிழரசுக் கட்சியினரை சந்தித்துள்ளமை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.