தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்!
மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தலைமன்னார் ரயில் சேவை, இன்று (நவம்பர் 12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் படி, கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் இடையிலான ரயில் சேவைகள் பின்வரும் வகையில் அமையவுள்ளது:
1. இலக்கம் 5003 – கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார்:
– புறப்படல்: 16:15 (நவம்பர் 12)
– தலைமன்னார் அடைதல்: 22:15 (நவம்பர் 12)
2. இலக்கம் 5004 – தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை:
– புறப்படல்: 04:15 (நவம்பர் 13)
– கொழும்பு கோட்டை அடைதல்: 10:15 (நவம்பர் 13)
இந்த அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.