தாதி மீது தாக்குதல், கொந்தளிக்கிறது யாழ் மந்திகை ஆஸ்பத்திரி
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நுழைந்து கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை நபர் ஒருவர் தாக்கியதை கண்டித்து வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பேராட்டமானது, நேற்று 12 மணி முதல் ஒரு மணிவரை இடம்பெற்றது.
கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தர் மீது மர்மநபர் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தை கண்டித்து வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, “உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயுதம் தாங்கிய பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்து மற்றும் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்” போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.