தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையை பதிவு செய்ய ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு
(LBC Tamil) பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
அவரது மரண விசாரணை முதலில் திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், ஷாப்டரின் உறவினர்களின் வேண்டுகோளின் பிரகாரம், சாட்சியங்களை அவரது அலுவலகத்தில் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக மேலதிக நீதவான் தெரிவித்தார்.
இதனால் இந்த தகவல்களை சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு இயலாமல் போனது.
தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்த நிறைவேற்று அதிகாரியிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.