தீபாவளி தினத்தில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பலி
தீபாவளி தினமான நேற்று (31) வந்தாறுமூலை, பலாச்சோலை பகுதியில் பாவனையற்ற கிணறில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள நிகழ்வு இதய வலியை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததாவது, சிறுவன் தவறி விழுந்த கிணறு துருப்பிடித்த தகரத்தால் மூடியிருந்ததோடு, அதில் பலமற்ற ஏணியொன்றும் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், சிறுவன் அதில் ஏறி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த ஏறாவூர் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் உடலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இன்று (01) உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.