தேர்தலுக்கு பணம் கொடுத்தால் மீண்டு வந்த பொருளாதாரம் மீண்டும் மண்கௌவும் – நிதி அமைச்சு
(LBC Tamil) அரச ஊழியர்களின் சம்பளம் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மட்டுமே அரசாங்கத்தினால் வழங்கக்கூடியதாக இருப்பதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து நாடு மீள முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பெறுபேறுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தலுக்கு பணம் ஒதுக்க முடியாது, பணம் ஒதுக்க வேண்டுமானால் கடந்த 06 மாதங்களில் பொருளாதாரத்தை மீட்பதற்கான வேலைத்திட்டம் அழிந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.