நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நவம்பர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 2655 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இவ்வருடம் 45004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதிக்குள் 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.